மாணவர்களை மீட்க உக்ரைன் போரை நிறுத்திய பிரதமர் மோடி? – ஜே.பி.நட்டா பேச்சு!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (09:04 IST)
கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இந்திய மாணவர்களை மீட்க உக்ரைன் போரை பிரதமர் மோடி நிறுத்தியதாக பேசியுள்ளார்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கர்நாடக மாநில கட்சிகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆகியவை தீவிரமான பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் யாத்திரைகளை நடத்தி வருகின்றன.

நேற்று உடுப்பி நகரில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் “இந்திய வரலாற்றிலேயே மோடியை போல சிறந்த பிரதமர் வேறு யாரும் இல்லை. இந்திய மாணவர்கல் 22,500 பேரை மீட்பதற்காக பிரதமர் மோடி உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தினார். உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்களில் பலர் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கு பிரதமர் மோடியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளே காரணம் என கூறிய அவர், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டவர்கள், இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர் என அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிப்பதே பாஜகவின் நோக்கம் என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்