இளையராஜாவை இப்படி பேசலாமா? – ஜேபி நட்டா கண்டனம்!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:28 IST)
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியது சர்ச்சையான நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இளையராஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இசையமைப்பாளர் இளையராஜா அவரது கருத்தை கூறியதற்காக அவரை இப்படி வசை பாடுவது சரியா?” என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்