இன்று கரையை கடக்கும் ஜாவத் புயல்: கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (08:06 IST)
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது என்றும் அந்த புயலுக்கு ஜாவத் என்ற பெயர் வைக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த புயல் இன்று கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவத் புயல் ஆந்திரா மாநிலம் மற்றும் ஒடிசா ஆகிய அவர்களுக்கு இடையே இன்று காலை கரையை தொட்டு அதன் பின்னர் கரையை கடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த புயல் ஆந்திரா வடக்கு மற்றும் ஒடிசா நோக்கி செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மாவட்டங்களுக்கும், ஒடிசாவின் கஜபட்டி, கஞ்சம், புரி, ஜெகத்சிங்பூர்ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதே போல் தமிழகத்தில் உள்ள பாம்பன், கடலூர், நாகை, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால்ஆகிய பகுதிகளிள் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்