வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:32 IST)
ஜாவத் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் மத்திய மேற்கு வங்கக்கடலில்  உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

 
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் தோன்றிய வளிமண்டல காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வரை இந்த புயல் காரணமாக பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் ஜாவத் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் மத்திய மேற்கு வங்கக்கடலில்  உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜாவத் புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, ஒடிசா மாநில கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்