மக்களவை தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்? தேர்தல் கமிஷன் ஆலோசனை

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (12:41 IST)
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தலையும் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதியை முடிவு செய்ய நாடு முழுவதும் தேர்தல் கமிஷன் அலுவலர்கள் பிரயாணம் செய்து அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்றும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் வரும் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என அம்மாநில மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்