திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலந்ததாக பொய் கூறிய சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதியில் லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதால், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநில மக்கள் மட்டுமின்றி, திருப்பதி செல்லும் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் இதனால் மனக்கவலை அடைந்த நிலையில், இதற்கு பரிகாரம் செய்ய பரிகார பூஜை நடத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருந்தார். அதன்படி, திருப்பதி கோயிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, அரசியல் ஆதாயத்திற்காக திருப்பதியில் லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு கூறிய பொய்யால் ஏற்பட்ட பாவத்தை போக்க செப்டம்பர் 28ஆம் தேதி சிறப்பு பூஜை நடத்துமாறு ஆந்திர மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.