மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு; ஐயப்பன் கோவில் இன்று நடை அடைப்பு!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (08:46 IST)
சபரிமலையில் நடைபெற்று வந்த மண்டல பூஜைகள் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் முடிவடைந்த நிலையில் இன்று நடை மூடப்படுகிறது.

கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் மாலை போட்டு சென்று தரிசனம் மேற்கொண்டனர்.

கொரோனா காரணமாக தினசரி தரிசனத்திற்கு எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டதுடன், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. பின்னர் பம்பை நதியில் நீராடவும், மண்டபங்களில் தங்கவும் அனுமதிக்கப்பட்டது.

இன்றுடன் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மற்றும் தரிசனம் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலை நடை மூடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்