இந்தியாவின் அண்டை நாடான சீனா, அவ்வப்போது இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களை உரிமை கொண்டாடி வருகிறது. குறிப்பாக அருணாச்சலபிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சீனாவின் அத்துமீறல் அதிகம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அருணாச்ச பிரதேசம், சிக்கிம் மாநில அஎல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பையும் மீறி சீன ராணுவம் எல்லைக்குள் ஊடுருவியதாகவும், இதற்கு இந்திய ராணுவம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மீண்டும் அவர்கள் சீன எல்லைக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசியபோது சீன வீரர்கள் சிலர் போட்டோ எடுத்து கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் சீன வீரர்கள் இந்திய எல்லையில் இரண்டு பதுங்குகுழிகளையும் அமைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பதுங்கி குழிகளை தகர்த்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன ராணுவம் இந்திய ராணுவ வீரர்களால் இதேபோல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.