ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டியது அரசின் கடமை – நிர்மலா சீதாராமன்

Webdunia
ஞாயிறு, 17 மே 2020 (11:43 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை அறிவித்தார். இந்த சிறப்புத் திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த 4 நாட்களாக விரிவான விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார் இன்று   5 வது நாளாக  5 வது கட்ட அறிக்கைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

 அவர் இன்று தனது 5 வது கட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது :

கொரொனா காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை வாய்ப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள 8..19 கோடி விவசாயிகளுக்கு ரூ.2ஆயிரம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

பசியில் உள்ள மக்களுக்கு உணவளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏழை மக்களுக்கு உணவுப் பொருல் கிடைக்க வழி செய்யும்.
ஜன் தன் வங்கிக் கணக்கு உள்ள 20 கோடி பெண்களுக்கு ரூ.10,025 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜன் தன்  கணக்கு மூலம்  இதுவரை 20 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

22 கோடி தொழிலாளர்கள் கட்டணத்தில் 85 % சதவீதத்தை மத்திய அரசு  ஏற்கவுள்ளது. ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தில் 85 % மாநில அரசு ஏற்கும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு அரிசி, கோதுமை ,பருப்பு ஆகியவை இலசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று 7 முக்கிய துறைகளுக்கான  அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்