பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். இந்தியில் பாபி, கர்ஸ், அமர் அக்பர் ஆண்டனி போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது மிக பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வருகிறார். சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ரிஷி கபூருக்கு மனைவி மகன் ( ஹிந்தி நடிகர் ) ரன்வீர் கபூர்,மகள் ரித்திமா கபூர் ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில் கொரொனா பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ரிஷிகபூரின் மகள் சாலைவழியே டெல்லியில் இருந்து மும்பைக்கு காரில் புறப்பட்டுள்ளார்.