தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுகளம்.. இஸ்ரோ சிவன் அறிவிப்பு

Arun Prasath
வியாழன், 2 ஜனவரி 2020 (08:23 IST)
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர்  கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்க முயற்சித்த போது நிலவின் 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. பின்பு எவ்வளவோ முயன்றும் விக்ரம் லேண்டாரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியம் என்ற இளைஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விக்ரம் லேண்டாரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், ”வேகமாக சென்று நிலவின் மீது மோதியதால், லேண்டரை தரையிறக்க முடியவில்லை, சந்திரயான் 2 ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது. அது 7 ஆண்டுகளுக்கு தகவல் அனுப்பும் மேலும், “சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்படும்” என கூறினார்.

மேலும் ”தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2,300 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்