இதனையடுத்து தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியம் என்ற இளைஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விக்ரம் லேண்டாரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், ”வேகமாக சென்று நிலவின் மீது மோதியதால், லேண்டரை தரையிறக்க முடியவில்லை, சந்திரயான் 2 ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது. அது 7 ஆண்டுகளுக்கு தகவல் அனுப்பும்” என கூறியுள்ளார்.