இந்தியா வந்த ஈரானியர்கள் மாயம்!? – தேடிவரும் வெளியுறவுத்துறை

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (09:49 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்தியா வந்த ஈரானியர்கள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து ப்ரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவை தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விசாவை தடை செய்துள்ளது இந்திய அரசு. இந்நிலையில் விசா தடைக்கு முன்பு இந்தியா வந்த 495 ஈரான் சுற்றுலா பயணிகளை கண்டறிய முடியவில்லை என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பே அவர்கள் இந்தியா வந்ததாகவும், அவர்களை குறித்து ஈரான் தூதரகத்திடம் எந்த தகவல்களும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா – ஐரோப்பா உச்சிமாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனாவால் 107 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்