விரலை காட்டி செல்பி எடுத்து வீண் வம்ப விலைக்கு வாங்காதீங்க: ரூபா ஐபிஎஸ் வேண்டுகொள்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (18:19 IST)
விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வளைத்தளத்தில் போடுவது மூலம் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என ரூபா ஐபிஎஸ் கூறியுள்ளார்.
 
சசிகலா பெங்களூர் சிறையில் விதி மீறி நடந்து கொள்வதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் ரூபா ஐபிஎஸ். இவர் தற்போது செல்பியால் நிகழபோகும் விபரீதம் குறித்து எச்சரித்துள்ளார்.
 
பொதுமக்கள் தங்களது விரலை காட்டி செல்பி எடுக்கிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ரூபா ஐபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  விரலை காட்டி செல்பி எடுப்பதன் மூலம் நமது தொழில்நுட்ப தகவலை ஹேக்கர்ஸ் திருடலாம் என கூறியுள்ளார். 
 
மேலும், நமது செல்பியில் உள்ள கை விரல்களை ஜூம் செய்து அதை ஸ்கேன் செய்து அதை வைத்து நமது கை ரேகையை உருவாக்கலாம் .இப்படி கை ரேகையை உருவாக்கி பெரிதளவில் குற்றம் நடக்கும் இடங்களில் அதை பயன்படுத்தலாம் மற்றும் பெரிதளவில் மோசடி செய்யவும் அதை பயன்படுத்தலாம்.
 
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக செய்திகள் வைரலாக பரவி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்