கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது என்றும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சரியாகயில்லை என்றும், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டு காவல்துறைக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், அவர்களை வைத்து இந்த வழக்கை விசாரணைஅனுமதிக்க கூடாது. காவல்துறையில் 90% வேலைகளை செய்து கான்ஸ்டபிள் போன்றோர் தான் செய்கிறார்கள். மேல் அதிகாரிகளை மாற்றினால் என்ன அர்த்தம். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு முறையான நியாயம் கிடைக்க வேண்டும்.
கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சரியாகயில்லை. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரணடைந்தவர்கள் முக்கியமல்ல, இந்த படுகொலை சம்பவத்திற்கு மூளையாக இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.