சர்க்கரை அளவை அதிகரிக்க வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்..! அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..!!

Senthil Velan

வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:41 IST)
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால் என அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. 
 
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கேஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அவருடைய மருத்துவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
 
கேஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுபடுவதாகக் கூறி இந்தக் கோரிக்கையை அவரது தரப்பு முன்வைத்துள்ளது. வாரத்தில் 3 நாட்கள் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் மருத்துவரிடம் ஆலோசிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
 
இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் ஜோஹப் ஹுசைன், “ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகக் கூறும் நபர் சிறையில் தினமும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார் என்றும் இனிப்பு வகைகள், சர்க்கரை கலந்த தேநீர் என உட்கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
 
தனது ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாகக் கூறி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரும் முனைப்போடு வேண்டுமென்றே கேஜ்ரிவால் இவ்வாறு செய்கிறார் என்று அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

ALSO READ: விருதுநகர் வேட்பாளர் ராதிகா மீது புகார்..! தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கேஜ்ரிவாலின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்