காதலன் தற்கொலை செய்தால் காதலி பொறுப்பேற்க முடியாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Siva

வியாழன், 18 ஏப்ரல் 2024 (08:25 IST)
காதலன் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காதலியும் அவருடைய தோழிகளும் பொறுப்பேற்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த தற்கொலைக்கு அவர் காதலித்து வந்த பெண் மற்றும் அவருடைய தோழி தான் காரணம் என்று அவருடைய தந்தை புகார் அளித்திருந்தார்

இந்த வழக்கில் காதலி மற்றும் அவரது தோழி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது காதலன் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காதலி எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தேர்வில் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு ஆசிரியர் பொறுப்பேற்க முடியுமா, அது போல் தான் இதுவும் என்று தெரிவித்தார்.

மேலும் இருவருடைய வாட்ஸ்அப் மெசேஜ்களை பார்க்கும் போது அந்த இளைஞர் சென்சிட்டிவ் நபர் என்று தெரிகிறது அவர் எடுத்த தவறான முடிவுக்கு காதலி பொறுப்பேற்க முடியாது என்றும் பலவீனமானவர்கள் எடுக்க முடிவுக்கு மற்றொருவர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஏற்கனவே அந்த இளைஞன் தனது காதலியிடம் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவ்வப்போது மிரட்டி இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளதாகவும் அதனால் இரு பெண்களுக்கும் ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்