மாயமான ரஷ்ய விமானத்தின் பாகங்கள் சீனாவில் கண்டெடுப்பு! - என்ன நடந்தது?

Prasanth K

வியாழன், 24 ஜூலை 2025 (13:42 IST)

ரஷ்யாவில் மாயமான பயணிகள் விமானத்தின் உடைந்த பாகங்கள் சீனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சைபீரிய விமான நிறுவனமான Angaraவின் AN-24 என்ற பயணிகள் விமானம் 6 விமான குழுவினர், 5 குழந்தைகள், 43 பயணிகளுடன் கடந்த வியாழக்கிழமை அன்று ஆமூர் நகரத்திற்கு சென்றுக் கொண்டிருந்தபோது, தரையிறங்கும் நேரத்திற்கு சில மணி நேரங்கள் முன்பாக விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததுடன், அதன் ரேடார் சிக்னல்களும் நின்று போனது.

 

அதை தொடர்ந்து ரஷ்யா பல விமானங்களை கொண்டு காணாமல் போன விமானத்தை தொடர்ந்து தேடி வந்த நிலையில், விமானத்தின் உடைந்த பாகங்கள் ரஷ்ய - சீன எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமான விபத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த விமானம் எவ்வாறு விபத்திற்குள்ளானது என்பது குறித்தும் ரஷ்ய அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்