3 மாடியிலிருந்து கைக்குழந்தை வீச்சு; சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (17:57 IST)
ஞாயிற்று கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 3வது மாடியிலிருந்து குழந்தை ஒன்று கீழே வீசப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஒருவர் பதறிப்போய் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குழந்தையை தூக்கி செல்வதற்கு முன் மாடியை பார்த்தவாரே நிற்கிறார். பிறகு அந்த குழந்தை  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 
பகதூர்புரா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் உயரத்திலிருந்து விழுந்ததா, வீசப்பட்டதா என்று தெரியவில்லை. இந்நிலையில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
 
நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
 


நன்றி: Bezawada Media     
அடுத்த கட்டுரையில்