உலகின் மிகச்சிறந்த கடற்கரை. இந்தியாவின் அந்தமான் தீவு கடற்கரைக்கு 8வது இடம்

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:13 IST)
உலகின் மிகச்சிறந்த கடற்கரைகள் குறித்த சர்வே ஒன்றை டிரிப் அட்வைசர் என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக எடுத்து வந்தது. இந்த சர்வேக்காக ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, கரீபியன், அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 343 கடற்கரைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.




சுற்றுலா பயணிகளின் கருத்து மற்றும் கடற்கரையின் அழகு, கடற்கரைக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போக்குவரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு உலகின் 10 சிறந்த கடற்கரையின் முடிவை  டிரிப் அட்வைசர் அமைப்பு தற்போது அரிவித்துள்ளது.

இந்தப் பரிசீலனையின் முடிவின்படி பிரேசில் நாட்டின் பையா டோ சன்சோபெர்னாட்டோ டி நோரோன்ஹா என்னும் கடற்கரை உலகின் மிகச்சிறந்த கடற்கரையாக தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் அந்தமான் தீவில் உள்ள ராதாநகர் கடற்கரைக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்