கடந்த சில நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்திய ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுபடுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தை கட்டுபடுத்த மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல நாடுகளிலும் உயர்ந்துள்ளது.
இந்தியாவிலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் வீழ்ச்சியை சந்தித்து ரூ.81.18 ஆக ஆகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் இது மிகப்பெரும் வீழ்ச்சி என கூறப்படுகிறது.