கொரோனா, புயல், மழை.. பாதிப்புக்குள்ளான பம்புசெட் உற்பத்தி!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (15:32 IST)
இந்தியாவில் விவசாயம் முதற்கொண்டு வீட்டு பாசனம் வரை பலவற்றிற்கும் பயன்பட்டு வரும் பம்புசெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA),

இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (IPMA)
 மற்றும்

ராஜ்கோட் இன்ஜினியரிங் சங்கம் (REA) ஆகிய மூன்று சங்கங்களின்

அங்கத்தினர்கள் நாட்டின் பம்புசெட்டு உற்பத்தியில்  99 சதவீதம் தயாரிக்கின்றனர்.

இந்த மூன்று சங்கங்களின் சிறப்பு கூட்டம் காணொளி மூலம் சமீபத்தில் நடைபெற்றது. கொரனோ பொது முடக்கத்தில் இருந்து மீண்ட தொழில்களில் பம்பு செட்டு தொழிலும் ஒன்று. அரசாங்கத்தின் உதவிகள் குறிப்பாக 20 சதவீத அவசர கால மூலதன கடன் (ECGLS), கடன் திருப்பி செலுத்த கால அவகாசம் (Moratorium Benefits), தொழிலாளர் சட்டங்களில் வழங்கிய சலுகைகள் முக்கியமானது. இதனால் பம்பு செட்டு தொழில் 2ம் காலாண்டில் கடந்த ஆண்டை விட நல்ல வளர்ச்சியை பெற்றது.

இந்திய பம்பு செட்டு நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 16,000 கோடிகளுக்கு  வர்த்தகம் செய்கின்றன. இதில் சுமார் 20 லட்சம் பேர் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

 ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள மூலப்பொருட்கள் விலை ஏற்றம் பம்பு செட்டு தொழிலுக்கு சவாலாக உள்ளது. இந்த விலை ஏற்றத்தை மூன்று சங்கங்களின் பிரதிநிதிகள் விவாதித்தனர்.
மூலப் பொருட்களின் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்ததை விட இவ்வாறு உயர்ந்துள்ளது.

தாமிரம் (Copper) ரூபாய் 450 ஆக இருந்து ரூபாய் 680 ஆக உயர்ந்துள்ளது டிசம்பர் மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது.

துருபிடிக்காத எஃகு (Stainless Steel) ரூபாய் 65 ஆக இருந்து ரூபாய் 80 ஆக உயர்ந்துள்ளது  டிசம்பர் மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

EN8  ஸ்டீல்  ராடுகள் ரூபாய் 49.5 ஆக இருந்து ரூபாய் 67 ஆக உயர்ந்துள்ளது டிசம்பர் மாதத்தில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

எலக்ட்ரிகல் ஸ்டீல் (Electrical Steel)  ரூபாய் 54 ஆக இருந்து ரூபாய் 64.5 ஆக கிலோவிற்கு உயர்ந்துள்ளது  டிசம்பர் மாதத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

CRCA ஷீட்டுகள் ரூபாய் 44 ஆக இருந்து ரூபாய் 64 வரை கிலோவிற்கு உயர்ந்துள்ளது டிசம்பர் மாதத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

அலுமினியம் ரூபாய் 145 ஆக இருந்து ரூபாய் 166 ஆக கிலோவிற்கு உயர்ந்துள்ளது டிசம்பர் மாதத்தில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

உருக்கு இரும்பு ரூபாய் 64 ஆக இருந்து ரூபாய் 72 ஆக கிலோவிற்கு உயர்ந்துள்ளது டிசம்பர் மாதத்தில் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

பம்பு பேக்கிங் காகிதம் 23.7 ஆக இருந்து ரூபாய் 30.5 ஆக  உயர்ந்துள்ளது டிசம்பர் மாதத்தில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

PVC ரெசின் ரூபாய் 60 ஆக இருந்து ரூபாய் 140 ஆக  உயர்ந்துள்ளது டிசம்பர் மாதத்தில் 133 சதவீதம் அதிகரித்துள்ளது,  மேலும்
அட்டை பெட்டிகள் மற்றும் பேக்கிங் மெட்டீரியல் உள்பட 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

இந்த மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தினால் பம்பு செட்டுகளின் உற்பத்தி செலவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வு பம்பு செட்டு தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பம்பு செட்டுகளின் விலையை சுமார் 10 சதவீதம் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகள் தங்களின் விவசாய நீர் பாசன பணிகளுக்கு பம்பு செட்டுகளை  நம்பியே உள்ளனர். பம்புசெட்டுகளை விவசாயிகள் கொள்முதல் செய்து பொருத்தும் பொழுது இதற்கு தேவையான காப்பர் வயர்கள், பிவிசி பைப்புகள் மற்றும் இதர பொருட்களின் விலை சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, விவசாயிகள் தங்களில் பம்பு செட்டுகளின் கொள்முதலை தள்ளி வைப்பார்கள் இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்திய பம்பு மற்றும் மோட்டார் விற்பனை கடந்த ஆண்டு போதிய மழை இல்லாதது  மற்றும் கொரோனா காலங்களில் கணிசமாக பாதிக்கப்பட்டது. இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வு பம்பு செட்டுகளின் விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது,  இவ்வாறு
கோயம்புத்தூரை சேர்ந்த
திரு கே.வீ. கார்த்திக், தலைவர், SIEMA அவர்கள் குறினார்.

 
உலகளாவிய பம்பு செட்டு தேவைகளில் இந்திய பம்பு செட்டுகளின் பங்களிப்பு சுமார் 2 சதவீதம் மட்டுமே உள்ளது.

உலக பொருளாதாரத்தில் கோவிட் தாக்கத்திற்கு பின்பு பல்வேறு நாடுகள் சீனாவை தவிர்த்து இந்திய பொருட்களை நாடும் இந்த சூழ்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து வியாபார வாய்ப்புகள் உருவாகியுள்ள.  மூலப்பொருள் விலை ஏற்றம் இந்த வாய்ப்புகள் தவறும் அபாயம் உள்ளது.  10 சதவீத விலை ஏற்றத்தினை கடும் போராட்டத்திற்கு பிறகு வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் இந்த சூழ்நிலைகளில் அன்றாடம் ஏற்படும் விலை ஏற்றதினால் மேலும் விற்பனை விலையை உயர்த்த நேரிட்டுள்ளது இத்தைகைய விலையை சர்வதேச வியாபாரிகள் ஏற்க மறுத்து ஆர்டர்களை ரத்து செய்யும் நிலை உள்ளது.

இந்த மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தினால் உற்பத்தியாளர்களின் நடப்பு மூலதன தேவை  (working Capital) சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.  மத்திய அரசு வழங்கிய 20 சதவீத அவசர கால கோவிட் கடன் (ECGLS) சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தற்பொழுது பயன்படுத்திவிட்டன.

எலக்ட்ரிகல் ஸ்டீல் (Electrical Steel), PVC ரெசின், வார்ப்பு இரும்பு மற்றும் scrap ஸ்டீல், அலுமினியம் போன்ற முக்கியமான பொருட்கள் இருப்பு இல்லாத காரணத்தினால் சில தொழில் கூடங்கள் மூடப்படும் நிலையும் உள்ளது.” என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நடந்த கூட்டத்தில் திரு பிரபுதாஸ் பட்டேல், தலைவர், இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம்,

திரு ஜிக்னேஷ் அட்ரோஜா, தலைவர், பம்பு கிளப், ராஜ்கோட் இன்ஜினியரிங் சங்கம், திரு கிருஷ்ணகுமார், முன்னாள் தலைவர், SIEMA மற்றும் IPMA, திரு பரத் பட்டேல், முன்னாள் தலைவர், IPMA, திரு பிரேம் ஆனந்த் பட் முன்னாள் தலைவர், IPMA, திரு ஜெயக்குமார் ராம்தாஸ், தலைவர், கோஇந்தியா, திரு.டீ.சி.தியாகராஜன், முன்னாள் தலைவர், SIEMA, திரு மிதுன் ராமதாஸ், உப தலைவர், SIEMA,  திரு.மா. செந்தில்குமார், உப தலைவர் SIEMA, திரு திலீப் தக்கார், திரு ரஜத், திரு அனூப் அகர்வால், திரு வினோத் அஸ்டோரியா போன்ற முன்னணி பம்பு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்