தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன், இப்போதே பிரச்சாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
கட்சி தொடங்கும் பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒரே சமயத்தில் ரஜினி கட்சியினர் மேற்கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடுகள் நடப்பதாக மன்ற நிர்வாகிகள் சிலரே புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.