காஷ்மீரில் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாத இளைஞருக்கு இந்திய ராணுவம் டீ வழங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
காஷ்மீரின் யுரி செக்டாரில் இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் பாகிஸ்தான் பயங்கரவாத இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் ராணுவம் நடத்திய விசாரணையில் ரூ.20 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு இந்தியாவில் ஆயுதம் சப்ளை செய்ய வந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த பயங்கரவாத இளைஞரை மீடியா முன் கொண்டு வந்தபோது அவருக்கு ஒரு கப்பில் டீ வழங்கப்பட்டிருந்தது. இதை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானில் பிடிப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தனுக்கு பாகிஸ்தான் ராணுவம் டீ வழங்கியது குறித்து அப்போது பாகிஸ்தான் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதே போல டீ டம்ளரை வைத்து இந்திய நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவதாக கூறப்படுகிறது.