வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பெரும் உயிரிழப்பு நிகழ்ந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் அதிக கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் உள்ள எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக கேரளாவில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று குறிப்பாக வயநாட்டில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள மாநில அரசு எடுத்து மீண்டும் ஒரு பேரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது