இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Siva

புதன், 14 ஆகஸ்ட் 2024 (15:02 IST)
இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்கள் ஆகவே சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் இதனால் நீர்நிலைகளில் படிப்படியாக தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மேற்கண்ட 18 மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்