ஒரு நாளைக்கு மக்கள் சாப்பாடு செலவு என்ன? ஆய்வறிக்கையில் புதிதாக சேர்ப்பு!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (09:26 IST)
சாதாரண மக்களின் வருடாந்திர உணவு செலவு குறித்த விவரங்கள் புதிதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இன்று மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் அன்றாடம் மக்கள் உணவுக்காக செலவிடும் தொகை குறித்த விவரங்களும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த விவரத்தின்படி சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் உணவுக்காக செய்யும் செலவு 2015க்கு பிறகு குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் சைவ உணவு உண்பவர்கள் ஆண்டுக்கு 11 ஆயிரம் வரையிலும், அசைவ உணவு உண்பவர்கள் 12 ஆயிரம் வரையில் பணம் மிச்சம் செய்திருப்பதாக அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆண்டில் உணவுக்கு சராசரியாக நாளுக்கு 25 ரூபாய் வீதம் ஒரு நபருக்கு செலவு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் சுப்ரமணியன் “தாலிநாமிக்ஸ்” என்ற பெயரில் சாமான்ய மனிதர்களின் உணவு செலவை பொருளாதார அறிக்கையில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்