சீனாவிலிருந்து விமானத்தில் வந்த இந்தியர்கள்: டெல்லியில் மருத்துவ பரிசோதனை

சனி, 1 பிப்ரவரி 2020 (08:46 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கு சிக்கி தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் வேகமாக ப்ரவி வருகிறது. இதனால் விகான் மற்றும் சுற்றியுள்ள 12 நகரங்களில் அனைத்து விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன. இதனால் சீனாவில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் சீன அரசிடம் அனுமதி பெற்று இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை சீனாவுக்கு அனுப்பியது இந்தியா. நேற்று புறப்பட்டு சென்ற அந்த விமானம் சீனாவில் உள்ள 324 பேரை மீட்டு இன்று இந்தியா திரும்பியுள்ளது. அந்த 324 பேருக்கும் டெல்லியில் உயர்மட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. 14 நாட்கள் மருத்து சிகிச்சையில் வைத்திருந்து அவர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே தங்களது ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்