அமெரிக்க கப்பலுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்.. இந்திய கடலோர பாதுகாப்பு படை செய்த உதவி..!

Mahendran

வெள்ளி, 11 ஜூலை 2025 (15:25 IST)
அமெரிக்கக் கப்பலுக்கு திடீரென சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படை அமெரிக்க கப்பலுக்கு உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திரா பாய்ண்டிலிருந்து தென்கிழக்கே 52 நாட்டிகல் மைல் தொலைவில், அமெரிக்கக் கப்பல் திடீரெனப் பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்து நின்றது. 
 
இது குறித்து தகவல் அறிந்த இந்தியக் கடலோரக் காவல்படை மீட்புப் பணிகளில் இறங்கியது. ஐ.சி.ஜி.எஸ். என்ற மீட்புக் கப்பலின் உதவியுடன், அமெரிக்க கப்பலையும் அதில் பயணம் செய்த இரண்டு பேரையும் மீட்கும் பணியில் இறங்கியது.
 
பலத்த காற்று மற்றும் தொழில்நுட்பப் பிரச்சனை இருந்தபோதிலும், அமெரிக்க கப்பலை இந்திய கடலோரக் காவல்படையினர் துறைமுகத்திற்கு வெற்றிகரமாக கொண்டு வந்தனர். நடுக்கடலில் அமெரிக்க கப்பல் சிக்கிய இரண்டே நாட்களில் இந்திய கடலோரக் காவல்படை எந்தவித சேதமும் இல்லாமல் துறைமுகத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, இந்திய கடலோரக் காவல்படையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்