ராணுவத்தில் இளைஞர்களுக்கு குறுகிய கால பணிகள்! – இந்திய ராணுவத்தின் புதிய திட்டம்!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (08:21 IST)
இந்திய இராணுவத்தில் புதிய முயற்சியாக இளைஞர்களுக்கு 3 ஆண்டுகால குறுகிய பணிகள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகில் அதிக அளவு இராணுவ துருப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 13 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் உள்ள இந்திய இராணுவத்தின் மீது இளைஞர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் பலர் ராணுவத்தில் சேர்ந்து குறுகிய காலம் பணி புரிவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த இந்திய ராணுவ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

”டூர் ஆஃப் டூட்டி” எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டு காலம் வரை இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரியலாம். கல்வி, உடல் தகுதி போன்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு குறுகிய கால பணிகள் அளிப்பதன் மூலம் இளைஞர்கள் பலர் ராணுவ பணிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் ராணுவத்திற்கான செலவுகளும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்