இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
காஷ்மீரில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைவதும் அதனை இந்தியா முறியடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதில் அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறும்.
இந்நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காஷ்மீர் பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரழந்தார். இதனையடுத்து இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ரணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ வீரர்களின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.