இந்து சமய அறநிலையத்துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை டெபாசிட் செய்யும் திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர் பாபு திருக்கோயிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை எவ்வளவு பேர் எதிர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஆனால், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மூன்றரை ஆண்டில், இத்திட்டம் மூலம் திருக்கோயில்களுக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியவர்கள் கூட, தற்போது பாராட்டி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.