வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் அச்சம்..!

Siva

திங்கள், 14 ஜூலை 2025 (10:01 IST)
இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியப் பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது என்பதும், இந்தியா-பாகிஸ்தான் போர், ஈரான் - இஸ்ரேல் போர், உக்ரைன்  -ரஷ்யா போர் போன்ற அச்சுறுத்தலையும் தாண்டி பங்குச்சந்தை பெரிய அளவில் சரியாமல் நிதானமாக வர்த்தகம் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில், மும்பை பங்குச் சந்தை (BSE) 1330 புள்ளிகள் சரிந்து 82,311 ஆக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை (NSE) 33 புள்ளிகள் சரிந்து 25,188 ஆக உள்ளது.
 
இன்றைய பங்குச் சந்தையில் அப்போலோ ஹாஸ்பிட்டல், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஜியோ பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்