ஒலியை விட அதிவேகம், இலக்கை தாக்கிய பிரமோஸ்! – இந்திய சோதனை வெற்றி!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (10:30 IST)
ஒலியை விட வேகமாக சென்று தாக்கும் இந்தியாவின் ப்ரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒலியை விட வேகமாக பயணித்து தாக்கும் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பிலும், சோதனையிலும் உலக நாடுகள் பல ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவும் கடந்த சில ஆண்டுகளில் சூப்பர் சோனிக் ஏவுகனைகள் செலுத்துவதில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணையான ப்ரமோஸ் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக செய்து வருகிறது. முன்னதாக சுகோய் ரக விமானத்திலிருந்து வான்வெளி இலக்கு, தரை இலக்கு ஆகியவற்றை தாக்கும் சோதனையில் ப்ரமோஸ் வெற்றியடைந்தது. இந்நிலையில் போர்க்கப்பல்களில் இருந்து தரை இலக்குகளை நோக்கி ப்ரமோஸ் ஏவுகணையை செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

தற்போது நடத்தப்பட்ட இந்த சோதனையிலும் ப்ரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் உலகிலேயே கடற்படை, விமானப்படை, தரைப்படை என மூன்றிலும் சூப்பர் சோனிக் ஏவுகணையை உபயோகிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்