பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ’’புதிய செயலி’ அறிமுகம்- ரயில்வே துறை

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:32 IST)
பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு இந்திய ரெயில்வே நிறுவனம் எனது தோழி என்ற ஆப்பை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் சில இடங்களில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.

எனவே பெண்களுக்குப் பாதுக்காப்பு அளிக்கும் வகையில் மத்திய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்த வகையில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு எனது தோழி என்ற திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகம்செய்துள்ளது.

இந்தச் செயலின் மூலம் ரயிலில் செல்லும் பெண்கள் புறப்படும் இடம் தொடங்கி இறங்கும் இடம் வரையில்  பாதுக்காப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பயணத்தின் போது எதாவது பிரச்சனை நேர்ந்தால் இடையூறு இருந்தால் உடனே 182 என்ற எண்ணிற்குப் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பெண்கள் வரவேற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்