டீக்கடைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்.. 10 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. அனைவரும் கைது..!

Siva

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (08:41 IST)
தெலங்கானா மாநிலம், ஜனகாம் நகரில், ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
முகமது ஒவைசி, முத்யால பவன் குமார், பௌத்தூலா சிவா குமார், நூக்கலா ரவி, ஜெட்டி சஞ்சய், முகமது அப்துல் கயோம், புஸ்தகலா சாய் தேஜா, முத்தாடி சுமந்த் ரெட்டி, குண்டா சாய் சரண் ரெட்டி, மற்றும் ஓருகண்டி சாய் ராம் ஆகிய 10 பேர் கொண்ட கும்பல் ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி, காரில்   "டீ வேர்ல்ட்" என்ற இடத்திற்கு அழைத்து சென்று பின்னர் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அந்த பெண்ணைக் காதலிப்பதாக கூறி கோவாவுக்கு அழைத்து சென்று, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
பாதிக்கப்பட்ட பெண்ணின் அத்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்