அமெரிக்கா துபாய்க்கு போட்டியாக களமிறங்கும் இந்தியா

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (15:39 IST)
அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு போட்டியாக இந்தியாவில் 7 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக உள்ளன.


 

 
இந்தியா முழுவதும் நகரங்கள் அனைத்தும் நவீனம் ஆகிவருகிறது. ஸ்மார்ட் நகரங்கள் கட்டுமான பணியில் இந்தியா தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறது. குஜராத்தில் கிப்ட் சிட்டி என்ற பெயரில் 359 ஹெக்டர் நிலப்பரப்பில் ஸ்மார்ட் நகரம் கட்டமைகப்பட்டு வருகிறது.
 
இந்த கிப்ட் சிட்டி அகமதாபாத்தினை இந்தியாவின் நிதி நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஐடி, டெக் நிறுவனங்கள், இண்டர்னேஷ்னல் வங்கிகள், பங்கு சந்தை எக்ஸ்சேஞ்ச், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
 
இதே போன்று ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 54,000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சூரத், கான்பூர், நொய்டா, புனே ஆகிய நிறுவனங்கள் நகரங்களிலும் ஸ்மார்ட் நகரங்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
 
இந்தியாவில் மொத்தம் 7 ஸ்மார்ட் நகரங்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு போட்டியாக இந்தியாவிலும் வரும் ஆண்டுகளில் இந்த ஸ்மார்ட் நகரங்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்