இது தான் இந்தியா! புரிந்துக்கொள்ளுங்கள் பாகிஸ்தானியர்களே!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (01:15 IST)
பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டிய கசூர் மாவட்டத்தின் தாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மொகமது தன்வீர் (12). 


 
 
அந்த சிறுவன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள சர்வதேச எல்லையை கடந்து வழிதவறி இந்திய பகுதிக்குள் நுழைந்தான்.
 
இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது, தண்ணீர் தேடி வந்ததாகவும், வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தவிட்டதாகவும் தெரிவித்தான். 
 
இதையடுத்து, மொகமது தன்வீரை இந்திய வீரர்கள் தங்களது முகாமில் இரவு பத்திரமாக தங்க வைத்துள்ளனர்.
 
பின்னர், இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின் அடுத்த நாள் காலை 11.00 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர். 
 
கடந்த வாரம் இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவான் பாகிஸ்தான் பகுதிக்குள் தெரியாமல் நுழைந்தார். ஆனால் அவர் இன்று வரை பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் தான் உள்ளார். 
அடுத்த கட்டுரையில்