இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டு அலை பாதிப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் சர்வதேச விமான சேவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதனால் சில நாடுகளுக்கு சிறப்பு விமான சேவைகள் மட்டுமே தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது உலக நாடுகள் சிலவற்றில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. அதனால் இந்தியாவில் ஒமிக்ரான் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் காரணமாக டிசம்பர் 15 முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமான சேவைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.