வீரியமிக்க ஒமிக்ரான்... கொரோன வந்து குணமானவர்களுக்குதான் அதிக ஆபத்து!

புதன், 1 டிசம்பர் 2021 (10:23 IST)
வீரியமிக்க ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த முதற்கட்ட அடிப்படை விவரங்கள் ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ளது. 

 
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.
 
இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயண தடைகளை விதித்துள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 15 நாடுகளில் ஒமிக்ரான் பரவி உள்ளது. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த முதற்கட்ட அடிப்படை விவரங்கள் ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
சாதாரண காய்ச்சல், உடல் வலி, தொண்டை கரகரப்பு போன்றவை ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கொரோனா பாதித்து குணமடைந்தவர்களை இது எளிதில் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் குறைபாட்டுடன் சிகிச்சை பெற்றவர்களை ஒமிக்ரான் தாக்கும் வாய்ப்பு.
 
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் தொற்று மூலம் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களுக்கு பெரிய அளவுக்கு பாதிப்புகள் இருக்காது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்