கொரோனா பற்றிய போலி செய்தி பரப்பல் - இந்தியாவுக்கு முதலிடம்

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (09:00 IST)
கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.  
 
இந்நிலையில் கொரோனா குறித்த போலியான தகவலை பரப்பும் நாடுகள் குறித்து கனடாவில் உள்ள அல்பட்ரா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. 
 
இந்தியாவில் எழுமிச்சை சாறு குடித்தால் கொரோனா வராது, மஞ்சள்தூள், வேப்பிலை, ஏலக்காய், கற்பூரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும், கதிர்வீச்சு மூலம் கொரோனா பரவுகிறது என தவாறான தகவல்கள் பரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்