நள்ளிரவு 12 மணி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்!!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (13:05 IST)
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம், இன்றுடன் நிறைவடைகின்றது.


 
 
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பலர் வருமான வரி தாக்கல் செய்யாததால் கடைசி நாள் ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் வருமான வரித் தாக்கல் செய்வது இன்றுடன் முடிவடைகிறது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதால், நள்ளிரவு 12 மணி வரை வருமான வரித்துறை அலுவலகம் திறந்திருக்கும் அறிவித்துள்ளனர். 
 
அடுத்த கட்டுரையில்