கொரோனாவின் பெயரில் ரூ. 3 கோடி வசூலித்த இளைஞர்கள் !

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (15:45 IST)
இந்தியாவில் 16 லட்சத்தை கொரோனா பாதிப்பு நெருங்குவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 15 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ள இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 15,83,792 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.20 லட்சமாக உயர்வு. இந்தியாவில்  ஒரே நாளில் 4,46,642 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 52,123 பேருக்கு கொரோனா. மேலும் 775 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொரொனாவின் பெயரால் சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ வெளியிட்டு  15 நாட்களில் சுமார் ரூ.3 கோடி வரை பணம் வசூல்  செய்த இளைஞர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சல்மான்கான், அமகது மொய்தீன் ஆகிய இருவரிடமும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்