பணமதிப்பிழப்பு பாதிப்பு - மறக்க முடியாத புகைப்படங்கள்

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (11:40 IST)
கடந்த வருடம் நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் மக்களிடம் பேசிய மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் தற்போது முதல் செல்லாது என அறிவித்தார். 


 

 
கருப்புப்பணத்தை மீட்பதற்காகவும், தீவிரவாத குழுக்களிடம் சிக்கியுள்ள பணத்தை குறிவைத்தும் இந்த திட்டம் செயல்படுத்தபடுவதாகவும் அறிவித்தார். அதோடு 100 நாட்களுக்குள் மட்டும் மக்கள் பிரச்சனையை சந்திப்பார்கள். மக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என அறிவித்தார். 
 

 
அதன் பின் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற மக்கள் வங்கிகளில் மாற்ற வரிசையில் நாள் கணக்கில் தவம் கிடந்தார்கள். வங்கியில் பணம் செலுத்தியவர்கள், புதிய பணத்தை எடுக்க ஏ.டி.எம் மையங்களின் முன் குவிந்தனர். பல ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர்.

 

பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்த விட்ட நிலையில்,  அப்போது மக்கள் பட்ட பாடுகள் குறித்து வெளியான சில மறக்க முடியாத புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....












 
 





தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்