இந்திய பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று அனைவருக்கும் ஆதார். ஆதார் அட்டை அனைவருக்கும் கொடுத்து அந்த எண்ணை வங்கி, பாஸ்போர்ட், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், மொபைல் எண் உள்பட அனைத்திலும் இணைக்க வேண்டும் என்பதே மத்திய, மாநில அரசின் கொள்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 'ஆதார் கார்டு திட்டத்திற்கு சட்ட ஆதாரமே கிடையாது... காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆதாரை ஒழிப்போம்' என்று கூறியுள்ளார். ஆதார் அட்டைக்காக பல லட்சம் கோடி செலவு செய்துள்ள பணம் வீணாகுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.