சினிமா போன்று பால் விற்று ஒருவருடத்தில் கோடீஸ்வரியான பெண் !
சனி, 9 ஜனவரி 2021 (18:43 IST)
குஜராத் மாநிலத்தில் பால் விற்பனை செய்து ஒரே ஆண்டில் ரூ.1.10 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் ஒரு மூதாட்டி .
இந்தியாவில் அறுபது சதவீத மக்கள் கிராமங்களில் விவசாயத்தை நம்பியுள்ளனர். அவர்களின் பல நேரங்களில் இயற்கைச் சீற்றத்தால் கடுமையன பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தற்போது, விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 62 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1.10 கோடிக்கு பால் விற்பனை செய்து வருமானம் ஈட்டியுள்ளார்.
இவர் த்னது பண்ணையில் 80 எருமை மாடுகள், 45 பசுக்கள் வைத்துள்ளதாகவும் இதன் மூலம் மாதம் ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாகச் சம்பாதித்ஹ்டு வருவதாகவும் கூறியுள்ளார்.