விஜய்யின் ’’மாஸ்டர்’’... நீண்ட நாட்களுக்கு பேசப்படும் ... இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவல் !

சனி, 9 ஜனவரி 2021 (18:37 IST)
விஜய்யின் மாஸ்டர் படத்தின்  3 வது புரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் ஹிந்தி டிரெயிலர் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து ஒரு முக்கிய தகவலை இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.



(மாஸ்டர் இந்தி டிரெயிலர்).


இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்காத நிலையில் தியேட்டர்கள் திறப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரும் 11 ஆம் தேதி வரை 50% அனுமதியளித்து , 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படம் பற்றி இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு கேரக்டர்களான ஜேடி மற்றும் பவானி நீண்ட நாட்கள் நாட்டில் பேசப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனவரி 14 ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீஸாகும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் சிறப்புக் காட்சிகளுக்குப் பேசிவருவதாகத் தெரிவித்துள்ளார். விரையில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் எனத் தெரிகிறது.

மேலும் இன்று மாஸ்டர் பட 5 வது புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Much awaited #MasterPromo5#MasterFilm #Master @actorvijay pic.twitter.com/9XZzjb6Wia

— Vijay Fans Trends (@VijayFansTrends) January 9, 2021


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்