தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிடுங்கள்..! ஜனாதிபதிக்கு, முன்னாள் நீதிபதிகள் கடிதம்..!!

Senthil Velan

திங்கள், 3 ஜூன் 2024 (22:11 IST)
தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 7 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.
 
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை  எண்ணப்படுகிறது. இந்நிலையில்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 7 பேர் கடிதம் எழுதி உள்ளனர். அதில், நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன என்றும் பல புகார்கள் வந்தாலும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
 
தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.  எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றன என்றும் லோக்சபா தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்திய விதம் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது என்றும் கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.
 
தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர். ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமூகமாக இருக்காது என்றும் பாஜக தோற்றால் அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்றும் ஓட்டு எண்ணிக்கையின் போது விபரீத சூழல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

ALSO READ: வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!!
 
ஓட்டு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எவ்வித பிரச்னைகளும் ஏற்பட விடாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் வந்தால், சுமுகமாக இருக்காது என்றும் அந்த  கடிதத்தில் முன்னாள் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்