இஸ்லாமியர்களுக்காக சவுதி இளவரசிடம் பேசியவன் நான்! – ப்ளேட்டை திருப்பி போட்ட பிரதமர் மோடி!

Prasanth Karthick
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (10:20 IST)
சமீபத்தில் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் நேற்று உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய மக்களை ஆதரித்து பேசியுள்ளார்.



நாடு முழுவதும் மக்களவை தேர்தல் காரணமாக பிரச்சாரம் களைகட்டி வருகிறது. முதற்கட்ட தேர்தல் 19ம் தேதி முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவ்வாறாக சமீபத்தில் ராஜஸ்தானில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் உரிமைகளை இஸ்லாமியர்களுக்கு அள்ளி கொடுக்க முயன்றதாகவும், மேலும் இஸ்லாமிய சமூகம் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 5 ஆண்டுகளில் 41% அதிகரிப்பு..!

இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள அலிகார் பகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் “இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்காகதான் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டால் லஞ்சம் கொடுத்து அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. நான் சவுதி இளவரசியிடம் பேசி இஸ்லாமியர்களுக்கான ஹஜ் பயண கோட்டாவை அதிகரித்து கொடுத்ததுடன், விசா நடைமுறைகளையும் எளிமைப்படுத்தினேன். இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு உள்ளது” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்