சிங்கத்தை சீண்டி பார்த்த இளைஞர்; ஐதராபாத்தில் பரபரப்பு! – வைரலான வீடியோ!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (12:44 IST)
ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் இருப்பிடத்திற்குள் இளைஞர் ஒருவர் புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் ஏராளமான வன மிருகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆப்பிரிக்க சிங்கங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூங்காவிற்கு சென்ற இளைஞர் ஒருவர் அத்துமீறி சிங்கம் வாழும் பகுதிக்குள் சென்றதுடன் பாறை மீது ஏறி சிங்கத்தை சீண்டும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கு வந்த பூங்கா ஊழியர்கள் சிங்கத்திடமிருந்து அவரை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் சிங்கத்திடம் அவர் வம்பு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்